நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for October, 2006

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ….!

Posted by naagooraan on October 21, 2006

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ….!

எல்லோரும் தூங்கலையா இன்னும் (இரவு பார்ட்டி கண்டுக்காதீங்க….)

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

( யாரும் போய் பார்த்த மாதிரி தெரியலையே….)

Posted by naagooraan on October 20, 2006

வணக்கம் எல்லோருக்கும்,

இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லோரும்?
போய், முதல்ல இத படிங்க அய்யா!

( யாரும் போய் பார்த்த மாதிரி தெரியலையே….)

வாக்கு உங்கள் விருப்பம் ……!

http://www.thenkoodu.com/dfontpageskip.php?url=http://nagore-mani.blogspot.com/2006/10/blog-post_116115765278419458.html

Posted in Uncategorized | 1 Comment »

தங்கள் விமர்சனம் தேவை!

Posted by naagooraan on October 20, 2006

வணக்கம் எல்லோருக்கும்,

இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லோரும்?

போய், முதல்ல இத படிங்க அய்யா?

வாக்கு உங்கள் விருப்பம் ……!

http://www.thenkoodu.com/dfontpageskip.php?url=http://nagore-mani.blogspot.com/2006/10/blog-post_116115765278419458.html

வாக்கு இருக்கோ இல்லையோ,
உங்கள் விமர்சனத்தை பதிவு செய்யுங்கள் தயவு செய்து!நன்றி!

Posted in Uncategorized | Leave a Comment »

சுதந்திரம் கைக்கெட்டும் தூரத்தில் தான்…..!

Posted by naagooraan on October 18, 2006


சுதந்திரம் கைக்கெட்டும் தூரத்தில் தான்…..!

இந்த கட்டுரைக்கு போகுமுன்னர் சில சிந்தனைக்கு தாங்கள் ஆட்படவேண்டும், அவை யாவன…
அமெரிக்க அதிபர் ஆகட்டும் ஒசாமாவாகட்டும் ஜனநாயக மன்னன் ஆகட்டும் தீவிரவாதியாகட்டும், எது அளவு கோல் தீவிரவாத்த்துக்கு? அல்லது சனநாயத்துக்கு?
கொலைகள் எத்தனை வகை, சில வகை கொலைகள் – கொலைகள் ஆகாதோ?
கொலைகள் செய்பவரை பொறுத்து மாறுமோ?மாறுகிறது. வாருங்கள் கட்டுரைக்கு இப்பொழுது…

சனநாயகத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது, இவற்றை நாம் களையாவிட்டால், சனநாயகத்துக்கு விடுதலை கொடுக்காவிட்டால், நமது மனித இனம் அழிவது உறுதி!

இவ்வுலகத்தை ஆக்கிரமித்துள்ள தீவிரவாதத்தினால் பாருங்கள் எவ்வளவு கொலைகள்? அதற்கு குறைந்தால் எங்கே மானம் போய் விடுமோ என்று மக்களாட்சி தலைவர்கள் செய்யும் (தற்காப்பு?)போர்க்கொலைகள்!

மனித உரிமை ஆர்வலர்களை விட்டு விட்டோமே….? இவர்களிடமிருந்து கூட ஒரு விதமான விடுதலை வேண்டும்தான் இந்த சமூகத்துக்கு!

என்னய்யா குழப்பம் நான் சொல்லுவதில்?
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை, சும்மா மின்னல் மாதிரி வருகிறார்கள், கோரிக்கைகள், கண்டனங்கள், உண்ணாவிரதங்கள் அப்பப்பா சும்மா பின்னி எடுத்து விடுகிறார்கள் போங்கள்!

சில கேள்விகள் அவர்களுக்கு, ( உங்கள் சிந்தனைக்கு )

– எந்த தீவிரவாதியையாவது நீங்கள் மனித உரிமையை மீறுகிறீர்கள் என்று கண்டித்து இருக்கிறீர்களா?

– தீவிரவாத தாக்குதல்கள் பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

– தீவிரவாதத்துக்கு பலி ஆனவர்களுக்கு, அவர்களது குடும்பத்தினர் மனித உரிமை மீறலால் மிகபெரிய இழப்புக்கு ஆளானவர்கள். இவர்களை பற்றி ஏதேனும் அறிக்கை விட்டிருக்கிறீர்களா?

இல்லை ஒரு அனுதாபம்?

தீவிரவாத இயக்கத்தை முதலில் கண்டியுங்கள், எதிர்த்து போராடுங்கள். அப்புறம் வாருங்கள் உச்ச நீதி மன்றத்தை பற்றி பேச!

சக மனிதனின் உயிரை திட்டமிட்டு, காத்திருந்து, நேரம் பார்த்து, குழந்தை, முதியோர் என பாராமல் பறிக்கும் வெறி பிடித்தவன் மனிதனா?

மனிதனுக்குதானே மனித உரிமை? இவன் தான் மனிதன் என்றால் நான் யார்? நீங்கள் யார்? உங்களிடமிருந்தும் வேண்டும் விடுதலை இந்த சமூகத்துக்கு!

இந்த மக்களாட்சி அரசியல்வாதிகளை பாருங்கள்…
ஒரு கனிசமான ஓட்டு கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். அதற்கு தகுந்த கதையும் சொல்ல தெரியும். அப்புறம் என்ன? இந்த இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாதா?

புலிகளுக்கு தடை. சரி அவர்களை பற்றி நான் பேசவில்லை.
தமிழர் விடுதலை? இந்த விடுதலை பற்றி உன்மையிலேயே சமீபத்திலிருந்து அஞ்சுகிறேன்.

சமீபத்தில் நான் ப்டித்து உணர்ந்தது சில உங்கள் பார்வைக்கு…

தனிதமிழ் ஈழம் என்பதை இந்தியா விரும்பாதாம், காரணங்கள், ஈழம் கிடைத்து விட்ட பின்னர், தமிழ் ஈழமும் – சிறிலங்காவும் இந்தியா – பாகிஸ்தான் போல ஆகிவிடும் என்று இந்தியா கருதுகிறது.

சிறிலங்க அரசை கொஞ்சம் தட்டி வைக்கலாம் ஆணால் புலிகள் இந்திய மண்ணிலேயே வேலையை காட்டி இருப்பதால் நம்ப முடியாதாம் அவர்களை!.

இந்த மாதிரி நடந்து கொள்ளும் இவர்களிடமிருந்து எப்பொழுது எனக்கும் தமிழக மக்களுக்கும் விடுதலை?இவர்களை தமிழக மக்கள் வாக்குகளை காட்டி மிரட்டி செய்ய வைத்தால்தான் உண்டு. யார் ஆரம்பிப்பது? அவர்கள் தான் தனது வாரிசுகளை பதவியில் அமர்த்திவிடவேன்டும் கண்ணை மூடுவதற்குள் என்று தூங்காமல் உழைக்கிறார்களே!

இதெல்லாம் நடந்தால்தான் எனக்கு விடுதலை என்றில்லை!

சிலவற்றையேனும் அவர்கள் செய்யலாம்,
இந்தியாவிற்க்கு முதல் அகதி வந்தவுடன், சிறிலங்க அரசை கேள்வி கேட்டிருக்கலாம் என்ன நடக்கிறது உனது நாட்டில் என்று?
அவ்வப்போது சின்னதாக மிரட்டலாம் அமெரிக்கா போல!

நமது இனம் துன்புறும்போது கேட்காமல் இருந்தால், உலக அரங்கில் நமது மரியாதை குறைபடுமே என்பதற்காகவாவது கேட்கலாம்.

இவை எதையும் செய்யாமல் இந்தியா வாய்மூடி இருக்கிறது, இத்தனை கொலைகளுக்கு பிறகும் எந்த ஒரு பெரிய முயற்சியும் செய்யவில்லை. இந்தியா இல்லாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு வருமா என்றும் சந்தேகம் வருகிறது.

ஈழ விடுதலை அமைப்புகள் சற்று பொறுமையுடன், நீண்ட தொலைநோக்கோடு முடிவுகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து இந்தியாவின் நம்பிக்கையை பெற வேண்டும்.இப்பொழுது இருக்கும் அவநம்பிக்கை தான் நடப்பது எல்லாவற்றுக்கும் காரணம்.

-மன்னராட்சி முறை எப்பொழுது ஒழியும்? இந்தியா முழுதுமே ஒவ்வோர் குடும்பத்தின் தொடர்ந்த ஆட்சிதான். இதை எப்பொழுது நாம் உணரப்போகிறோம்?

-எல்லோரும் எப்பொழுது வாக்கு அளிக்க போகிறோம்?

-வாக்கு வீணாகி போகிறதென்ற நினைவை விட்டு, என்று பிடித்தவருக்கு வாக்கு அளிக்கபோகிறோம்?

-லஞ்சம் கொடுக்காமல், உரிய வேலையை, உரிய காலவகாசத்தில் பொறுத்து இருந்து முடிக்கபோகிறோம்?

-என்று பொதுசொத்துக்கு சேதம் வராமல், ஜாதி இட ஒதுக்கீடுகள் கேட்டு போராடாமல் இருக்க போகிறோம்?

தேர்தல் கமிசனுக்கு எப்பொழுது இன்னும் அதிக சுதந்திரம் கொடுக்க போகிறோம்?

இன்னும் நிறைய என்று? எப்பொழுது கேள்விகள்? போதும், நீங்களே அடுத்த கேள்வியை கேட்டு சிந்திக்கலாமே….!

விடுதலை எத்தனை விசயத்தில் நமக்கு இன்னும் தேவை பார்த்தீர்களா?
நமக்கு கிடைக்கும்……ம்….ம்?

எனக்கு தெரிந்து ஒரு வழி இருக்கிறது. சுலபமான வழி…..
மோட்சத்திற்க்கு பின் சுதந்திரம் நிச்சயம்…மோட்சம் மரணத்திற்க்கு பிறகுதான்…மரணம்…. அதான் வந்து கொண்டிருக்கிறதே…..

சுதந்திரம் கைக்கெட்டும் தூரத்தில் தான்…..!

Posted in Uncategorized | 4 Comments »

நாறும் இந்தியா…! நாறடிக்கும் காங்கிரஸ் அரசு !!

Posted by naagooraan on October 17, 2006

நாறும் இந்தியா…! நாறடிக்கும் காங்கிரஸ் அரசு !!

முஷாரஃப் இன் த லைன் ஆஃப் ஃபயர் – பற்றி என்ன தோன்றுகிறது உங்களுக்கு…?
கேள்வி பட்டவரை,
இந்தியாவை உலக அரங்கில் மட்டம் தட்டி இருக்கிறார். கார்கில் போரில் வெற்றி என்று கூறி இருக்கிறார். இந்திய காங்கிரஸ் அரசு வாயை மூடிக்கொண்டிருக்கிறது.
வெற்றி அது இது என்றால் பெருமை முன்னால் அரசுக்கு போய் விட்டால்? உத்தரவு எல்லோருக்கும் வாயை திறக்க கூடாது என்று! ராணுவ தளபதி களுக்கு தான் அந்த உத்தரவு. மூச்!!!!!!!!!!

எப்படி இருக்கிறது என்றால்?

கதாநாயகனுடைய தாயை வில்லன் கற்பழிக்க முயன்றான். அப்பொழுது கதாநாயகனுடைய இன்னொரு எதிரி நல்ல வேளையாக காப்ப்ற்றிவிட்டான்!வில்லன் அறைகூவல் விடுகிறான் உன்னுடைய தாயை கற்பழித்துவிட்டேன் என்று.

நம் கதாநாயகன் என்ன பன்றாரு, ….. ?

நானே எல்லாத்தையும் சொல்லனுமா?

கதாநாயகன் காங்கிரஸ் அரசு, வில்லன் முஷாரஃப். மொத்ததில் வெளிநாட்டு இயக்குநர் சோனியா இயக்கிய படு மோசமான இந்திய படம். இப்படி ஒரு கலாச்சார சீரழிவு படம் எடுக்க்க இத்தாலி யில் இடம் கொடுப்பார்களோ என்னமோ?

காங்கிரஸ் க்கு ஆதரவு அளித்த எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா?

செருப்போ, விளக்கமாறோ எதால் அடித்தாலும் எனக்கு பத்தாது. !!!!!!

Posted in Uncategorized | 8 Comments »

நாடே பற்றி எரியும்…!

Posted by naagooraan on October 15, 2006


இந்த இரண்டு செய்திகளும் தினமனி-யில் 15/10/2006 இன்று வெளியாகி உள்ளது. நமது பிரதமர் கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆக இவ்வளவு நாட்கள் நடந்தது என்ன? உறுதியான- நடைமுறை- செயல்திட்டம் இது வரை இல்லை என ஒப்புக்கொண்டிருக்கிறார்?
எவ்வளவு அற்புதமான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்?

இதுவரை செயல்திட்டம் இருந்திருக்கிறது. – ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது.

நடைமுறை செயல்திட்டம் கூட இருந்திருக்கிறது ஆனால் “உறுதியான” நடைமுறை செயல்திட்டம் தான் இல்லை.

இப்பொழுது என்ன நடக்கிறது என்று உணர்ந்து விட்டார்கள்.

இனிமேல் பாருங்கள் “பட்டயை கிளப்ப போகிறார்கள்” அவர்களது “செல்வாக்கை” வைத்து! ஹா ஹா ஹா………….! தமாஷ் தான் போங்கள்!!!


ஃபருக் இப்படி பேசக்கூடியவரா என்று தெரியவில்லை. ஆணால் நமது முதல் அமைச்சர் கூட கிட்டத்தட்ட அப்சலை விட்டுவிட சொல்லிவிட்டார். இவர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம். பேசாமல் ஐபிசி என்பதே தீவிரவாதிகளுக்கு அல்லது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்று ஒரு போடு (சட்டம்) போட்டு விடலாம்!

Posted in Uncategorized | Leave a Comment »