நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for November, 2006

சிந்திக்க…!

Posted by naagooraan on November 3, 2006

வணக்கம்,

தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் நம்மை மன்னராட்சி முறைக்கு இட்டுச்செல்கின்றனர்( காங்கிரஸ் கூடத்தான், ஆணால் அங்கு வலுகட்டாயமாக நடக்கவில்லை, பிறகு விளக்குகிறேன் இதை! ) இந்த தி.மு.க திரு எம்ஜிஆர் காலத்திலிருந்து கவனமாக இருக்கிறது, கட்சியை யாரும் கைப்பற்றிவிடக்கூடாது என்பதில்! இதற்கு சான்றுகள் தேவை இல்லை உங்களுக்கு!!

பா.ம.க ஆகா, கேட்கவே தேவை இல்லை.

அந்த கட்சியின் செயல்பாடுகள் சமூகத்திற்கு எவ்வளவு உபயோகமானவை! தமிழை காப்பதில் இருக்கட்டும், சினிமா கலாச்சாரமாகட்டும், ஆங்கிலத்தில் பேசிய பேத்திக்கு அவர் அபராதம் விதிப்பதில் இருக்கட்டும், அவர்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்தெந்த துறைகளில் விகிதாச்சாரப்படி இல்லை என்று கணக்கெடுப்பதில் இருக்கட்டும், நிழல் பட்ஜெட் போடுவதிலாகட்டும், சிகரெட் காட்சிகளுக்கு தடை ஆகட்டும், பேத்திகள் எல்லாம் தமிழ் வழி கல்வியில் பயில்வதாகட்டும், எந்தெந்த பாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கலாம் என்று முடிவு செய்வதிலாகட்டும், இலங்கை பிரச்சினைகள் பற்றி மத்திய அரசிடம் போராடும் முனைப்புதான் எத்தனை, தமிழகத்தை பிரிப்பது பற்றிய தன்னலமில்லா சமூக அக்கறையாகட்டும், அப்பபபா… அப்பபபா…அவர்கள் தானே நமக்கு தேவை?!

இப்பொழுது நாட்டில் யாரும் சிந்திக்க கூட தயாராக இல்லாத விசயத்தை பற்றி கூறுகிறேன். தயவு செய்து இந்த சிந்தனையை எல்லோருக்கும் எடுத்து செல்லுங்கள். நாம் சுதந்திரம் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதாக பெருமையடித்து கொண்டாலும், நாம் எல்லோரும் அடிமைகளே….!

அவ்வளவு விரைவில் (200 ஆண்டு அடிமை ரத்தம் அல்லவா?) நமது அடிமை ரத்தம் மாறிடுமா? எப்படி மாறும்? பரம்பரை பரம்பரையாக நாங்கள்தான் உங்களை ஆளப்போகிறோம் எனும் தி.மு.க குடும்பம் தான் நமது அடிமை கூட்டத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.
தலைவருக்கு பின் தளபதி ஆளுவார், அதற்கு பின் நமது தியாகி தயாநிதி ஆளுவார். அவருக்கு பின்…. கவலை படாதீர்கள், தலைவரின் உயிலின் படி அவர்களுக்குள் போட்டி இல்லாமல் யாராவது ஒருவர் அவர்களுடைய (நம்முடைய?) நாட்டை ஆண்டு, நம்மை போன்ற அடிமைகளுக்கு வழி காட்டுவார்கள்! அ.தி.மு.க? அட, எழுத அலுப்பாகிவிட்டது இந்த அடிமைக்கு, இதை படிக்கும் எந்த அடிமையாவது எழுதட்டும். என்னவெல்லாம் செய்யலாம் இதற்கு? எழுதுங்கள் இங்கே…. பிறகு நானும் எழுதுகிறேன்…

அனைத்து அடிமைகளுக்கும் நன்றியுடன்…

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

தி.மு.க அனுதாபிகள் கோபபடண்டா….

Posted by naagooraan on November 1, 2006

வணக்கம்,

தமிழ்நாட்டில் நம்பிக்கை துரோகம் அதிகம் ஆகிவிட்டது போலிருக்கிறது. எல்லோரும் கதறுகிறார்கள்……..!
நீங்கள் இதை எல்லாம் கண்டிக்க மாட்டீர்களா…..?

எனக்கென்னாவோ சட்டம் ஒழுங்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு நன்றாக இருப்பது போல் உள்ளது. என்ன சொல்றீங்க….? (மப்புல இல்லாதப்ப எழுதுனதுதா….ன்)

Posted in Uncategorized | 1 Comment »