நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for October, 2007

இந்த காரத்(M.P) தொந்தரவு தாங்க முடியல!

Posted by naagooraan on October 23, 2007

இந்த காரத் தொந்தரவு தாங்க முடியல. நானும் இப்போ கவுத்துட்வாங்க, நாளைக்கு கவுத்துடுவாங்க, நாளான்னிக்கு கவுத்துடுவாங்க, இல்ல இந்த காங்கிரஸ் வீரம் காட்டுனாங்களே ஆரம்பத்துல, (பிரதமர், வேணும்னா ஆதரவை வாபஸ் வாங்கிக்கங்கனார்) அதே மாதிரி மறுபடியும் ஏதாவது சொல்லுவாருன்னு பாத்தா, ஹூம்…..! இப்போ இன்னைக்கு காரத் அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்றோர்களை சந்திக்க போறாராம். இன்னைக்கு கெடு என்னையா ஆச்சு, பன்னாடைகள் இந்த விசயத்துல பேசாத பேச்சு இல்லை. கம்யூனிஸ்ட்கள், சோ சொல்வது போல கண்டிச்சுட்டே இருப்பாங்க போல, நாமதான் வேல மெனக்கட்ட மாதிரி…. (title la காரத் பக்கத்துல போட்டுருக்கிற M.P பட்டம் சரிதானே..? ம்ம்…?)
Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

டி.ஆர். பாலு – சாக்கடை – முத்துக்கள்!

Posted by naagooraan on October 21, 2007

டி.ஆர்.பாலு தினசரி அறிவுபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சில முத்துக்களை உதிர்ப்பார். இன்று உதிர்த்தது, “தலைவர் கலைஙர் அவர்களால் துவங்கபட்ட சேது சமுத்திரதிட்டம்” அவராலேயே கூடிய விரைவில் துவங்கி வைக்கபடுமாம்!

********** அப்டியாங்க……? **********

(சாக்கடை நாத்தம் எங்கிருந்தோ வருதுல்ல….? ஸாரி…! கிளரிட்டேன்…!)

Posted in Uncategorized | 1 Comment »

ஸ்ரேயா – இயற்கை உரம்?

Posted by naagooraan on October 21, 2007

சற்றுமுன் இயற்கை உரத்தால் விளைந்த காய்கறிகள் நெல்லை மாவட்டத்தில் ஒருஇயற்கை உர சந்தையில் நல்ல விலைக்கு போவதாக கலைஙர் டிவியில் காட்டினார்கள், சீக்கிரமாகவும் விற்று விடுகிறதாம்,

எல்லா மாவட்டத்திலும் தொடங்க அரசு முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்!

ஸ்ரேயா எதற்க்கு இங்கே என்கிறீர்களா? வந்ததுக்கு ஒரு உப்பு ஒங்களுக்கு!

Posted in Uncategorized | Leave a Comment »

தமிழ் வெங்காய பஜ்ஜி…!

Posted by naagooraan on October 21, 2007

சற்று முன் மக்கள் தொலைக்காட்சியில் திரு குழந்தைசாமி அவர்கள் பினாத்திகொண்டிருந்தார், அந்த சமயத்தில் மொழி திரைபடம், ஹிட் மேல ஹிட், பாட்ஷா படம், ஹரிஹரனின் பாடலுடன் கூடிய கிறுக்குதனம் ஆகியவை மற்ற தொலைக்காட்சிகளில் ஓடிகொண்டிருந்தது.
நான் அனைத்தையும் தவிர்த்து தமிழ் உணர்வு மேலிட மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் ஜல்லியை பார்த்து கொண்டிருந்தேன்.
கு.சாமி பெரியாரை பற்றி பெரிய அபிப்ராயம் வைத்திருக்கிறார், அதே சமயம் தமிழை போற்றுவோம் என்றும் கூறுகிறார், முரண்பாடு, மதம் மேல் நம்பிக்கை தேவை இல்லை அந்த அடையாளமே மனிதனுக்கு தேவையில்லையாம், ஆணால் தமிழன் என்று சொல்லனுமாம்!
வெங்காயம்!!
ஆங்கில மோகத்தை வேரறுத்த பிறகுதான் தமிழின் பெருமை மக்களுக்கு புரியும், அந்த மோகத்தை வேரறுக்க வேணுமெனில் அதை இலக்கண சுத்தமாக கிராமத்திலிருந்து ஆரம்பித்து அனைவருக்கும் கற்று கொடுத்து விடுவதே!

Posted in indian english, tamil, tamil english, tamil girls | 1 Comment »

ரஜினியின் அடுத்த படம்!

Posted by naagooraan on October 20, 2007

ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்தி இன்று வெளியானது, அனேகமாக நாந்தான் முதல் ஆளாக இதை வெளியிடுகிறேன் இங்கே என்று நினைக்கிறேன், ஏனென்றால் ……………….. ********************** %%%%%%%%%%%%%%%%%%
இப்படி ஒன்று நடந்திருந்தால் எல்லோருக்கும் இந்நேரம் தெரிந்திருக்குமே ஹி ஹி…! இந்த நாள் ஒரு இனிய நாளாகட்டும்!

Posted in rajini, superstar, tamil film, tamil films, tamilnadu | Leave a Comment »

மாசிலாவிற்க்கு!

Posted by naagooraan on October 5, 2007

என்னா மாசிலா ஐயா…? மாசு பட்டுடீங்களே!http://naalainamathae.blogspot.com/2007/10/blog-post_5219.html

தாங்களுமா கருணாநிதி என்ற சக்கரவர்த்திக்கு அடிமை? வேதாந்தியை BJP கட்சி தெளிவாக கண்டித்திருக்கிறது, கண்டனமும் தெரிவித்தாகிவிட்டது! இந்து மத அமைப்பு போன்றவர்களும் பகவத்கீதையை மேற்கோள் காட்டியதற்காக அவரை கண்டித்திருக்கிறார்கள்! அவர் கண்டிக்கத்தக்கவரே, சட்டப்படியான நடவடிக்கையும் தேவையே! ஆணால் தங்களின் – ஜனநாயக தலைவனின் – (BJP அலுவலகம் தாக்குதல், பேருந்துகள் முடக்கம், சன் DTH விற்பனையாளர்களை காவல் துறை கொண்டு மிரட்டுதல், கடைகள் மூட மிரட்டல் விடுத்தது, இன்னும் எத்தனை எத்தனை அராஜகங்கள்?) சமூகத்தொண்டுகள் பற்றியும் எழுதுங்களேன்!

Posted in Uncategorized | 2 Comments »

பகுத்தறிவும் கருணாநிதியும்!

Posted by naagooraan on October 3, 2007

பகுத்தறிவிற்க்கும் தற்போழுது உள்ள கருணாநிதிக்கும் உள்ள தொடர்புகள் பற்றி எழுதுங்களேன், முக்கியமாக, இந்த வேண்டுகோளை கலைஞர் கருணாநிதி ப்ளாக் ஆரம்பித்திருப்பவர்களுக்கும் மற்றும் இலைக்காரன் போன்ற இந்து மதம் மீது நல்லபிப்ராயம் வைத்திருக்கும் அனைவருக்கும் முன் வைக்கின்றேன்! கலந்து கொள்ளுங்கள் இந்த போட்டியில், இந்த வார இறுதிக்குள் வெளியிடுங்கள்! நன்றி!

Posted in Uncategorized | 1 Comment »