நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for June, 2007

கொப்பும் குலையுமாக சிவாஜி ஸ்ரேயா!

Posted by naagooraan on June 17, 2007

பிறகென்ன வலை நண்பர்களே,

சிவாஜி பார்த்திருப்பீர்கள்! போதும் போதும் என்கிற மாதிரி விமர்சனமும் படிச்சாச்சு!

நிறுத்திக்கலாம் தானே இதோடு!

அதற்க்கு முன், என் கருத்துக்கள் சிலவற்றையும் பார்த்துடுங்களேன்!

சிவாஜி நன்றாக இருக்கிறது!

கதை, (சங்கருக்கு வேறு கதை களம் இல்லை என்றே நினைக்கிறேன்)திரைக்கதை,வசனம், நடிகர்கள் மற்றும் நடிகைகள் (ஸ்ரேயா, coooool இல்ல?!) நன்றாக நடித்துள்ளனர்! மொத்தத்தில் குறை சொல்லத் தேவை இல்லாதபடிக்கு வந்துள்ளது!

அப்போ குறை சொல்லுபவர்கள்… வருகிறேன்,

நிறைய வலை பதிவர்கள், குறை கூறியிருக்கிறார்கள், சிவாஜி படத்தை பற்றி அல்ல, …. ரஜினியை பற்றி,

வெறும் வயித்த்தெரிச்சலாகவே உள்ளது அவர்களுக்கு, ரஜினியை குறை கூற வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமே, இப்போது என்ன நேரம் பார்த்திருக்கீறீர்கள்?

ஈழ தமிழர் ஒருவர் பெங்களூர் சொத்து குவிப்பில் ஆரம்பித்து காவிரி உண்ணாவிரதம் என்றெல்லாம் போய் கடைசியில் நெடுமாறன் போல் ஈழ பிரச்சினைக்கு குரல் எதுவும் அவர் கொடுக்க வில்லையாம், அய்யகோ, காவிரி பிரச்சினையை வைத்து இது வரை எல்லா நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளும் அரசியல் மட்டும்தான் செய்திருக்கின்றனர்! ரஜினி மட்டும்தான் உச்ச் நீதிமன்ற தீர்ப்பு காற்றில் கலப்பதை நினைவூட்டி உண்ணாவிரதம் இருந்தார்! நெய்வேலி போராட்டத்தில் எவ்வளவு அரசியல் அசிங்கங்கள் அரங்கேறியது, நினைவிருக்கிறதுதானே?

சொத்து பற்றி பேசுகிறார்கள், எல்லோரும் கூறுவதை, படித்தது போன்றவற்றை வைத்து பார்க்கும் போது ரஜினி மட்டும்தான் வெள்ளையாக வாங்கி, அமிதாப் போன்றவர்கள் போல் வரி பாக்கி வைக்காமல் முறையாக வரி கட்டி வருகிறார். அப்படி சம்பாதிக்கும் பணத்தில் அவர் எங்கே சொத்து வாங்கி குவித்தால் என்ன?

மத்தியிலும்,மாநிலத்திலும் ஊலா பாலா ஆட்சியாளர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில்,…

உண்மையில் ரஜினியிடம் இருக்கும், தெரியும், தெரிவதாக சொல்லபடும் தவறுகள் யாவும் மிகச்சிறியதுதான்! எனது மதிப்பில், ரஜினி “THE BOSS” தான், இப்போதைக்கு!

Posted in Uncategorized | 1 Comment »

சதுர்வேதியும் + நீங்களும் & இந்து மதமும்!

Posted by naagooraan on June 11, 2007


இந்து மதத்தை 50 – 60 ஆண்டுகள் வாழ்ந்து அழுகிப்போகும் அற்ப மணிதர்கள் யாரும் காப்பாற்ற முடியாது!

இதை பற்றி, மதத்தை பற்றி பேசும், விவாதிக்கும் யாரும் உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளவர்களே, உலக அளவில் கூட…!

Posted in Uncategorized | 1 Comment »

ரஜினி – தி மொட்ட பாஸ்!

Posted by naagooraan on June 8, 2007

####################################################
####################################################
#################%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%

இன்னைக்கு மேட்டர் நிறைய இருக்கு ஆனால்,
எழுத பிடிக்காமல் போய் விட்டது.
ஆனா, நாளைக்கு வந்து பாருங்க, சரியா…..?!

(வந்ததற்க்கு காரணம் தலைப்பு தானே,

ஹி, ஹி..! படம் கண்டிப்பா ஒரு வருசம் தான்!! )

Posted in Uncategorized | Leave a Comment »

கருமம்! இதை படிக்காதீங்க!!

Posted by naagooraan on June 7, 2007


எனக்கும் என் நண்பருக்கும் சிறிய வாக்கு வாதம், மன்மோகன் சிங் பாவமா?
அல்லது
கருணாநிதி பாவமா?
யாருமே நினைத்ததை செய்ய முடியவில்லை!
இவர்கள் இருவரும் மைனாரிட்டியாக இருந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்பது அவர்களது ஜாதகம் போல, வேறு என்ன சொல்வது!
(பொலம்ப உட்டுடானுங்களே நாதாரி பசங்க….!)

Posted in Uncategorized | 1 Comment »

சரோஜா சாமான் நிக்கோலா…!

Posted by naagooraan on June 6, 2007

ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்ப்பாழ் (தாழ்ப்பாள்!)

இதற்கு மேல் சொல்ல முடியாது என்னால், எனக்கென்று ஒரு தராதரம் உண்டு!

இதற்கு மேல் வேண்டுமென்றால் மஞ்சள் துண்டு மாமாவிடம் (தமிழக முதல்வரை) அணுகவும்!

05-ஜூந்2007 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிக்கையை படிக்கவும்.(06/ஜூன் தினகரன்!)

Posted in Uncategorized | Leave a Comment »

அமைச்சர் ஆனார் கனிமொழி!

Posted by naagooraan on June 6, 2007

கனிமொழி அரசியலுக்கு வந்து இவ்ளோ நாளாவுது, இன்னும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காதது, ஏமாற்றமே அளிக்கிறது!

என்னவென்று யாரும் கவலை பட்டதாக தெரிய வில்லை!

Posted in Uncategorized | 5 Comments »

50 பேர் ஆண்கள்! ஒரே ஒரு பெண்!

Posted by naagooraan on June 5, 2007







நாகூர் தியேட்டரில் கேசினோ ராயல் (007-bond picture ) நேற்று மாலை 6 மணி காட்சி போனேன், நல்ல காற்று, கூட்டம் அதிகம் இல்லை! அழகாக ரசித்து படம் பார்த்தேன்.

ஆங்கில படங்களை தமிழ் படுத்தி ஓட்டுகின்றனர். ஓடுகிறது. தினசரி 3 காட்சி வேறு!

சுமார் 50 பேர் ஆண்கள்! ஒரே ஒரு பெண்! கூட்டம் அவ்ளோதான்!

பத்து ரூபாய் டிக்கெட், 3 ரூபாய் பைக்குக்கு! (நிச்சயமான பொழுதுபோக்கு!)

எல்லாம் சிவாஜி யால் வந்த வினை!

வேறு படங்கள் இல்லை.

சில வருடங்களுக்கு பிறகு போகின்றேன் இந்த தியேட்டருக்கு, பாருங்கள் எங்க ஊர் தியேட்டரை!

Posted in Uncategorized | Leave a Comment »

முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!

Posted by naagooraan on June 1, 2007

ஜூனியர் விகடன் கேள்வி :

உங்கள் சகோதரர் ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!’ என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்… அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?

கனிமொழி பதில் :

“உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.

அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்… ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.

இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.

நீங்கள் குறிப்பிடும் ‘திணிப்பு’ என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை… அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்”

இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா……!) கேள்விகள்!
இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!

எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
‘அதேசமயம்’, ‘இருந்தாலும்’, ‘ஆனால்’, ‘ஒவ்வொருவரும்’

//// “உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////

உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!

இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?

முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?

முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!

இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?

மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் “தொண்டர்களாகவே” உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே…!

//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////

தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!

//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்” ////

ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,

நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,

நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!

இந்த ‘நன்னாரிக்கு’ தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு “ஓ” போடுவோம்!

Posted in Uncategorized | Leave a Comment »